
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் கலகலப்பு 2 திரைப்படம்.இத்திரைப்படத்தில் ஜுவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இவர்களுடன் ராதா ரவி,ரோபோ சங்கர், சதிஷ், சிங்கம் புலி, வையாபுரி ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை ஹிப் ஹாப் ஆதி இசையில் அவ்னி சினி மேக்ஸ் தயாரிக்கிறது.தற்போது இந்த படத்தின் தொலைகாட்சி உரிமையை அதிகாரப்பூர்வமாக சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.இதற்கு முன் கலகலப்பு முதல் பாகம் திரைப்படத்தையும் சன் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் சி-க்கும் இந்த சேனல்க்கும் என்ன தொடர்பு? யார் காரணம்? பதில் உலகம் அறிந்தது!
