Monday, June 5
Shadow

விஜயும் வேண்டாம் சூர்யாவும் வேண்டாம் எனக்கு ஜெயம்ரவி போதும் -சுந்தர் .C

விஜய் நடிப்பாரா ?, சூர்யா நடிப்பாரா ? என்று கடந்த சில வாரங்களாகவே சுந்தர் .சி அடுத்து இயக்க உள்ள பிரம்மாண்ட படத்தின் நாயகன் யார் என்பது பற்றிய பேச்சு இருந்து வந்தது. இவர்களை நம்பி ஒரு பிரோயோசனம் இல்லை இவர்களுக்கு என் வெற்றி பதில் சொல்லும் என்று வெறுத்து போய் வேற ஹீரோ என்று யோசிக்கும்போது மனைவி குஷ்பூ கொடுத்த நடிகர் அதாவது வெற்றி நாயகன் ஜெயம் ரவி

தற்போது அந்தப் படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தர் .சி படத்தின் கதையை ஜெயம் ரவியிடம் சொல்ல, கதையைக் கேட்ட ரவி உடனே நடிக்க சம்மதித்தார் என்றும் சொல்கிறார்கள்.

அது மட்டுமல்ல சுந்தர் .சியின் மனைவி குஷ்புவும், ஜெயம் ரவியின் மாமியாரும் நெருங்கிய தோழிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மிகப் பெரும் பட்ஜெட்டில் தயாரிக்க உள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணிபுரிய உள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட உள்ளது.

படத்தின் நாயகி யார், மற்ற நட்சத்திரங்கள் யார் என்பது பற்றியும் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். இந்த ஆண்டுக் கடைசியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

விஜய் சூர்யா விட என் கதை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சப்தத்துடன் களம் இறங்கும் சுந்தர். C

Leave a Reply