
சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் படம் என்றால் அது காப்பான் இந்த ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது இதற்க்கு முக்கிய கரணம் மோகன் லாலுடன் முதல் முறையாக இணைந்து இருப்பது தான் அது மட்டும் இல்லாமல் இந்த வருடதுக்கான வருகை இன்னும் வரவில்லை இதனாலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது அதோடு எந்த படம் முதலில் வெளியாகும் என்ற தவிப்பும் உள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த இரண்டு படங்களில் என்ஜிகே படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப்பணிகள் நடந்து வருகின்றன. என்ஜிகே, மே மாதம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோருடன் இணைந்து சூர்யா நடித்துள்ள காப்பான் படம், ஆகஸ்ட் 15-ந்தேதியான சுதந்திர தினத்தன்று வெளியாவதாக ஒரு பேட்டியில் சூர்யா தெரிவித்துள்ளார். ஆக, இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகின்றன.
