ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கும் சிங்கம் மூன்றாம் பாகமான சி3 படம் நேற்று (பிப்ரவரி 9 ஆம் தேதி) உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகியுள்ளது.
வெளியான அனைத்து இடங்களிலும் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ஒரு மசாலா விருந்து என விமர்சகர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி கல்ஃப் நாட்டில் ரஜினியின் கபாலிக்கு அடுத்து அதிக திரையரங்குகளில் வெளியான படம் இதுதானாம். அதே போல் உலகம் முழுவதும் ஒரே நாளில் 25 கோடி வசூல் செய்து மேலும் ஒரு சாதனையாம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சொன்னது போல் இந்த படம் 3௦௦கோடி கிளபில் சேருமா என்று பொருத்து இருந்து பார்ப்போம்