Wednesday, July 17
Shadow

இயக்குனர் ஜனநாதன் மறைவுக்கு டி.ராஜேந்தர் உருக்கம்


இயற்கை* க்கு மாறுபடாமல் நல்ல கருத்துக்களை தரும்
*ஈ* தல் குணம் மருவி கெடாமல்
சொல்ல வந்த கருத்துக்களை *பேராண்மை* யோடு வெளியிட்டு
பொதுவுடமை கருத்துக்களை பரப்புவதில் என் போக்கு தனி போக்கு பொது மக்களின் சொத்து ஆகிவிடாது *புறம்போக்கு* என இலட்சியத்தோடு படங்களை இயக்கி கொண்டிருந்த இயக்குனர் S.P.ஜனநாதன் அவர்கள் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த *லாபம்*

அவரது மறைவு என்பது காலனே இது யார் இட்ட *சாபம்*?

இயக்குனர் S.P.ஜனநாதன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.