
ஊரடங்கு நாட்களில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் ரொமான்ஸ் செய்த சல்மான் கான்…
ஊரடங்கு நாட்களில் நடிகர் சல்மான் கான், நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இருவரும் சேர்ந்து மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்து அதை வெளியிட்டுள்ளனர். ‘Tera Bina’ என்ற அந்த பாடலை பாடலாசிரியர் சபீர் அகமது எழுத அந்த பாடலை பாடியுள்ளார் சல்மான் கான்.
இந்தப் பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சல்மான் கான் மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக இருப்பதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தப் பாடலை தானே தயாரித்தும் இயக்கியும் உள்ளார் சல்மான் கான். இந்த பாடல் முழுவதும் சல்மான் கானின் பண்ணை வீட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் வெளியான இரண்டாவது பாடல் இதுவாகும். முன்னதாக 3 வாரங்களுக்கு முன்பு 'Pyaar Karona’ என்ற பாடலை வெளியிட்டிருந்தார் சல்மான் கான்.
https://www.youtube.com/watch?v=yomgbBEpErE...