
அனுஷ்காவுக்கு திருமணம்: ஆனால் மாப்பிள்ளை அந்த இருவரும் இல்லை
நடிகை அனுஷ்காவுக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபருக்கும் திருமணம் நடக்க உள்ளதாம். சூப்பர் தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் அனுஷ்கா. அருந்ததி படம் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது பாகுபலி 2 படத்தில் பிசியாக உள்ளார். இது தவிர இரண்டு தெலுங்கு படங்கள், எஸ் 3 படத்திலும் பிசியாக உள்ளார். அடுத்த மாதம் அவருக்கு 35 வயது ஆக உள்ளது. இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் தயாராகிவிட்டனர்.
அனுஷ்காவின் பெற்றோர் ஊர், ஊராக மாப்பிள்ளை பார்த்து இறுதியில் ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை தேர்வு செய்துள்ளார்களாம். அனுஷ்காவுக்கும், அவருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.
ராஜமவுலி இயக்கத்தில் அனுஷ்கா பாகுபலி 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பாகுபலி ரிலீஸான பிறகு திருமணம் செய்து கொள்ள வசதியாக அவர் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. பாகுபலி 2 ...