அமைதிக்கு பெயர்தான் தளபதி அவர் இப்படியும் செய்வாரா ?
இளைய தளபதி விஜய் என்றாலே அமைதியானவர் என்று தான் சொல்வார்கள். ஆனால், அவருடன் நடிப்பவர்களுக்கு தான் தெரியும், விஜய் எத்தனை ஜாலியான மனிதர் என்று.
சமீபத்தில் பைரவா படப்பிடிப்பில் நடந்த ஒரு விஷயத்தை சதீஷ் ஒரு நிகழ்ச்சியில் தொலைப்பேசி வாயிலாக கூறுகையில் ‘இந்த படத்தில் தற்போது நடனக்காட்சி எடுத்து வருகிறார்கள்.
நான் ரிகர்சல் செய்வதை விஜய் சார் பார்த்துக்கொண்டே இருந்தார், அருகில் வந்து ”என்ன பண்றீங்க” என கேட்டார், நான் “ரிகர்சல் பண்ணிட்டு இருக்கேன் சார்” என்று கூறினேன்.
அவர் என்னை ஒரு மாதிரி பார்த்து “அப்போ நான் பண்ணிட்டு இருக்குறது பேரு என்ன” என்று கேட்க ஒட்டு மொத்த யூனிட்டும் சிரிக்க தொடங்கியது’ என கூறியுள்ளார்....