ஆங்கிலபடம் இசை வெளியீட்டு விழா
R j மீடியா கிரியேஷன் சார்பில் குமரேஷ் குமார் இயக்கத்தில் ராம்கி நடிக்கும் திரைப்படம் ஆங்கிலப்படம். இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வடபழனியிலுள்ள பிரசாத் லேப்-ல் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் ராதாரவி,பவர் ஸ்டார், இயக்குநர்கள் RV உதயகுமார், பேரரசு மற்றும் நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி (எ) நட்ராஜ் கலந்துகொண்டனர். அவர்கள் திரைப்படத்தையும், திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்,நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை வாழ்த்தி பேசினர் அவை பின்வருமாறு,
ராதாரவி பேசுகையில்,
தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் பெருமளவில் வெற்றிபெற்றுவிடுகிறது, இருப்பினும் இது சினிமாவுக்கு முக்கியமல்ல ஏனெனில் மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட் உருவாக குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வருடங்களாகும், ஏனெனில் ஹீரோ கால்ஷீட், இசையமைப்பாளர் கால்ஷீட், இயக்குனர் கால்ஷீட் என பல்வேறு பிரச்...
