‘இறைவி’ படப்புகழ் பூஜா தேவாரியாவின் ஹாலிவுட் பயணம்
இயல்பான பாவனைகள் மற்றும் யதார்த்தமான நடிப்பு... இவை இரண்டும் தான் பூஜா தேவாரியாவின் சிறப்பம்சங்கள். செல்வராகவனின் 'மயக்கம் என்ன' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த பூஜா தேவாரியா, கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய இறைவி படத்தின் மலர் கதாபாத்திரம் மூலம், தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்து விட்டார். அடிப்படையில் தியேட்டர் கலைஞரான இவர், சமீபத்தில் வெளியான 'குற்றமே தண்டனை' மற்றும் 'ஆண்டவன் கட்டளை' ஆகிய திரைப்படங்களின் வலுவான கதாபாத்திரங்கள் மூலம், ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் அதிகளவில் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தன்னுடைய திறமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வரும் பூஜா தேவாரியா, தற்போது பாபி சிம்ஹா தயாரித்து நடிக்கும் 'வல்லவனுக்கும் வல்லவன்' திரைப்படம் மூலம் மீண்டும் வெற்றி கனியை சுவைக்க இருக்கிறார்.
புகழ் பெற்ற நாடக கலைஞரான பூஜா ...
