
‘கத்தி சண்டை’ படத்தைரிலீஸ் செய்யும் ‘கேமியோ பிலிம்ஸ்’
'பிளாக் அண்ட் வைட்' காலம் முதல் இன்று வரை திரையுலக அகராதியில் மிக முக்கியமான சொல்லாக கருதப்படுவது 'கேமியோ' (சிறப்பு தோற்றம்).... அப்படிப்பட்ட வலுவான பெயரை கொண்டு தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்த 'கேமியோ பிலிம்ஸ்' - சி ஜெ ஜெயக்குமார் தற்போது வர்த்தக உலகில் ஆழமாக கால் பதித்து, தொடர் வெற்றி பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறார்.
தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற 'திரிஷா இல்லனா நயன்தாரா' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான 'கேமியோ பிலிம்ஸ்' - சி ஜெ ஜெயக்குமார், தற்போது அவரின் அடுத்த தயாரிப்பில் உருவாகி வரும் 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த வர்த்தக உலகினரின் கவனத்தையும் ஈர்த்துளார்... இயக்குனர் அஜய் ஞானமுத்து, அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா, இந்தி திரையுலகின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் என இதுவரை எவரும் கண்டிராத, பிரம்மாண்டமான நட்சத்திர கூட்டண...