கர்ஜனை படத்துக்கு த்ரிஷா முக்கியத்துவம் கொடுப்பது படத்தின் கதைக்கு தான் இயக்குனர் சுந்தர் பாலு
நடிகைகள் தனி ஆவர்த்தனம் செய்யும் படங்களும் தமிழ்சினிமாவில் கவனிக்கப்படும் விசயமாக மாறிவருவது ஆரோக்கியமான பாய்ச்சல். தற்போது திரிஷா நடிப்பில் இயக்குநர் சுந்தர்பாலு இயக்கிய கர்ஜனை படம் கம்பீரமாக தயாராகி உள்ளது. ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை SDC பிக்சர்ஸ் வெளியீடுகிறது. அம்ரீஸ் இசை அமைக்க சிட்டிபாபு.கே ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைப்பயிற்சியை சுப்ரீம் சுந்தரும், நடனத்தை நோபால் அவர்களும் அமைத்துள்ளனர். விவேகா, கருணாகரன், சொற்போ பாடல்களை எழுத சரவணன் ஆர்ட் டைரக்டராகப் பணிபுரிந்துள்ளார்.
தமிழ்சினிமாவில் தனது திறமையான நடிப்பால் பதினைந்து ஆண்டுகளாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை திரிஷா. அவர் கதையின் நாயகியாக நடித்துள்ளதால் கர்ஜனை எதிர்பார்ப்புள்ள படமாகியுள்ளது. இப்படத்தில் திரிஷாவோடு வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, ஸ்ரீரஞ்சனி, தவசி, அமித்பார்கவ், சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா...
