களத்தில் சந்திப்போம் திரை விமர்சனம் (4/5)
ஜீவாவும் அருள்நிதியும் கபடி களத்தில் எதிரெதிர் அணியில் மோதுபவர்கள். களத்துக்கு வெளியே ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கும் உயிர் தோழர்கள். இவர்கள் இருவர்களின் வாழ்க்கையில் காதல், திருமணம் என்கிற கட்டம் வரும்போது அரங்கேறும் குழப்பங்கள், அது இவர்கள் நட்பை பாதிக்கும் விதம், அதிலிருந்து இவர்கள் இருவரும் மீண்டு வருவதே கதை.
ஜீவா, அருள்நிதி என இருவருமே அந்தந்தக் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார்கள். சின்னச்சின்ன சேட்டைகளில், கலாய்ப்புகளில் ஜீவாவும், ஆவேசமாக சண்டையிடுவதில், அடங்கிப் போவதில், அப்பாவி முகம் காட்டுவதில் அருள்நிதியும் ஈர்க்கின்றனர்.
இரட்டை நாயகர்கள் இருக்கும் கதையில் அதி முக்கியக் கதாபாத்திரமாக, நடக்கும் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது மஞ்சிமா மோகனின் கதாபாத்திரம். முதலில் யோசித்து முடிவெடுப்பது, எடுத்த முடிவில் உறுதியாக இருப்பது, தன் காதல் மேல் தைரியமாக இருப்பது ...