காதல் வசப்படும் காஜல் அகர்வால்
காதல் பற்றி சொல்லாத சினிமாவே கிடையாது. இதுபோல் காதல் கிசு கிசு இல்லாத நடிகைகளும் கிடையாது. ஒன்றிரெண்டு பேர்தான் அதற்கு விதிவிலக்கு. சமீப காலமாக காஜல் அகர்வால் பற்றிய காதல் விவகாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இப்போது அவர் பிடித்தமான வாலிபர் கிடைத்தால் காதலிக்க தயார் என்கிறார். இதுபற்றி காஜல் அகவர்வாலே சொல்கிறார்…
“காதல் என்பது வார்த்தைகளால் அனுபவிக்க முடியாத இனிய அனுபவம். அதை அனுபவிக்க இனி காதலிக்க தயாராக இருக்கிறேன்.
நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. காதலிக்க ராஜகுமாரன் தேவை இல்லை. எனக்கு பிடித்த ஜோடியாக இருந்தால் போதும். அவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை. என் எண்ணங்களை நேசிப்பவராக இருக்க வேண்டும். அவரது சொந்த வாழ்க்கையை விட என் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். என் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
எப்போதும் நான் அவரைப் பற்றி யோசிக்கும் அளவுக்கு பிடிக்க வேண்டும். இப்படிப்...