
நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர் சாக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் திரைப்படம் கொலையுதிர் காலம். இத்திரைப்படத்தினை யுவன் ஷங்கர் ராஜா தானே இசையமைத்து தயாரித்துள்ளார்.
கொலையுதிர் காலம், ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படத்தின் கருவை மையமாக வைத்து தயாராவதாக தகவல் கசிந்துள்ளது. வாய் பேச முடியாத, காது கேட்காத ஒரு இளம்பெண் சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிக்கொள்வதும், அவனிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதும் ‘ஹஷ்’ படத்தின் கதை.
இந்நிலையில் கொலையுதிர் காலம் படத்தின் விசுவல் புரோமோகள் அல்லது போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்த போஸ்டர்களில் இருந்து நயன்தாரா எந்த விதமான கேரக்டரில் நடித்துள்ளார் என்பது ஆர்வத்தை அதிகரித்து கொண்டே போகிறது.
தற்போது இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ஸ்டார்ட் போலாரிஸ் பிச்சர்ஸ் LLP உடன் இணைந்துள்ளது. இந்நிலையில், எட்செடேரா எண்டர்டேய்ன்மென்ட் புரொடியூ...