காவேரி பிரச்சனைக்கு முதல்வருடன் கை கோர்த்து நிற்போம் நடிகர் சங்கம்
உலகில் உள்ள நதிகள் அனைத்தும் எங்கே உற்பத்தியாக வேண்டும்- எங்கு சென்று சேர வேண்டும் என்று பல கோடி வருடங்களுக்கு முன்பே "இயற்கை" தீர்மானித்தது!
காட்டு விலங்குகளை உணவாக தின்று திரிந்த மனிதன், விவசாயத்தை கண்டறிந்த பின் அதற்காக நதியை ஒட்டிய இடங்களில் வந்து குடியேறினான்.!
"நதிக்கரை நாகரீகம்" வளர்ந்த பின் மனிதர்கள் "நதியை" தாயாகவும், கடவுளாகவும் போற்றி வந்து இருக்கிறார்கள்.
அன்றிலிருந்து "இரண்டாம் உலகப் போருக்கு" பின் நாட்டின் எல்லைகள் வகுக்கப்படும் வரை - நதி பொதுவானதாகவே கருதப்பட்டது!.
அதன் பின் "நதி நீர் கொள்கைகள்" வகுக்கப்பட்டு உலக நாடுகள் அதை பின்பற்றியும் வருகின்றன!.
உலக நாடுகளுக்கு பொருந்தும் விதி..! இந்தியாவில் உள்ள "கர்நாடக மாநிலத்திற்கு" பொறுந்தாமல் போனதுதான் வருத்தம்!.
நதிகள் உற்பத்தியாகும் இடத்தை விட அது சேரும் இடத்தை சார்ந்தவர்களுக்கு உரிமை அதிகம் என உலக விதி ...
