
மறைந்த இயக்குநர் மகேந்திரன் பெயரில் விருது – இயக்குநர் சங்கம் முடிவு
மறைந்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இயக்குநர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் மனோ பாலா, பேரரசு, யார் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய மனோ பாலா, மகேந்திரன் பெயரில் விருது வழங்க வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சங்கப் பொருளாளர் இயக்குநர் பேரரசு, மகேந்திரன் பெயரில் இயக்குநர் சங்கம் சார்பில் விருது வழங்கப்படும் என்று கூறினார். மேலும் தமிழக அரசு சார்பில் மகேந்திரன் பெயரில் விருது ஒன்றை உருவாக்க கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்....