‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இரண்டாவது பாடல் பூட்டானில் வெளியிடப்பட்டது
சினிமா வரலாற்றில் புதியதொரு சாதனையை படைக்க சிங்கப்பூரை நோக்கி தரை வழியே காரில் பயணித்து கொண்டிருக்கின்றனர், 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் குழுவினர். கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடிகர் சூர்யா கொடி அசைத்து ஆரம்பித்து வைத்த இந்த நெடுந்தூர 'சென்னை 2 சிங்கப்பூர்' பயணமானது ஏறக்குறைய பதினொன்று நாட்களுக்கு பிறகு தற்போது பூட்டானை கடந்துள்ளது.
அவர்கள் திட்டத்தின் படி தங்கள் 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் 'போடா..." எனப்படும் இரண்டாவது பாடலை பூட்டானில் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஜே.பாலாஜி, அபிஷேக்கின் குரலில் உருவாகி இருக்கும் இந்த 'போடா...' பாடலுக்கு சிக்காந்தர் மற்றும் அன்புகனி ஆகியோர் வரிகள் எழுதி இருப்பது மேலும் சிறப்பு.
பூட்டானின் எல்லை பகுதி ஆரம்பமானதும், அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரி ஜிப்ரானையும் அவரது குழுவினரையும் மேற்கொண்டு பயணிக...
