தனுஷின் சகோதரர் நடிக்கும் படம் ‘கதிரவனின் கோடைமழை’
இன்றைய சினிமாசூழலில் எல்லா திரையரங்குகளையும் பெரிய படங்கள் ஆக்கிரமித்துக் கொள்வதால் சின்ன படங்கள் மட்டுமல்ல சிலநேரம் சிறப்பான, தரமான படங்கள் கூட வெளியிட முடியாமல் சிக்கலுக்குள்ளாகித் தவிக்கின்றன. குறைந்த அளவிலேயே திரையரங்குகள் கிடைத்து அடையாளம் பெற முடியாமல் போய் விடுகின்றன.
'கதிரவனின் கோடைமழை' அப்படி ஒரு படம்தான். கிராமத்துக் கதையான அந்தப்படம், மார்ச்2016-ல் வந்த படம்.அப்போது ஊடகங்களில் குறைகள் பெரிதாகப் பேசப்படாமல் வரவேற்கப்பட்ட படம்.
ஆனால் திரையரங்குகள் கிடைக்காத பிரச்சினையால்அந்தப்படம் பாதிக்கப்பட்டது. அதனால் படம் வந்ததே யாருக்கும் தெரியவில்லை.
இருந்தாலும் இப்போது அப்படத்துக்கு மறு ஜென்மம் கிடைத்து இருக்கிறது.
கதிரவன் இயக்கத்தில் கண்ணன், (ஸ்ரீபிரியங்கா இப்போது ஸ்ரீஜா) இமான் அண்ணாச்சி நடித்த படம் தான்'கதிரவனின் கோடைமழை'
. யாழ் தமிழ்த்திரை சார்பில் கு.சுரேஷ்குமார். த.அலெக்...