வித்தியாசமான பரிமாணத்தில் உருவாகும் ‘தேடு’
*கிஷோர் சினி ஆர்ட் சிவகாசி முருகேசன் தயாரிப்பில், இயக்குனர் சுசி. ஈஸ்வர் இயக்கத்தில், சஞ்சய், மேக்னா நடிப்பில் வித்தியாசமான பரிமாணத்தில் 'தேடு'. கிஷோர் சினி ஆர்ட் சார்பாக சிவகாசி முருகேசன் தயாரித்து, தானே ஒரு முக்கிய வேடத்தில் எதிர்நாயகனாக நடித்திருக்கும் இப்படம், முற்றிலும் புதிய பரிமாணத்தில், வித்தியாசமான கதை களத்துடன் ரசிகர்களை ஈர்க்க தயாராகி வருகிறது. இணைய தலைமுறை திரைப்படத்தை இயக்கிய சுசி. ஈஸ்வர் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகனாக சஞ்சய் நடிக்க, 'உறுதிகொள், வீராபுரம்' ஆகிய படங்களில் நடித்த மேக்னா, நாயகியாக நடிக்கிறார்.
மது மயக்கத்தில் ஒருவர், காதல் மயக்கத்தில் இளம் காதலர்கள், செல்ஃபி மயக்கத்தில் இளம் மாணவ-மாணவியர் என முப்பரிமாணத்தில் பயணப்படும் இக்கதை, வித்தியாசமான கதைகளத்துடனும், எதிர்பாராத திருப்புமுனைகளுடனும், விறுவிறுப்பான காட்ச...
