
“நடிகர்களுக்கு வயது வரம்பு கிடையாது. திரைக்கு வராத கதை படவிழாவில் நதியா
“நடிகர்களுக்கு வயது வரம்பு கிடையாது. நடிகைகளுக்கு இளமையான தோற்றம், ஒரு வரம்” என்று நடிகை நதியா கூறினார்.
திரைக்கு வராத கதை இசை வெளியீட்டு படவிழா
முழுக்க முழுக்க பெண்களே நடித்து, ‘திரைக்கு வராத கதை’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை துளசிதாஸ் டைரக்ஷனில், கே.மணிகண்டன் தயாரித்து இருக்கிறார். நதியா, இனியா, கோவை சரளா, ஆர்த்தி, ஈடன், ரேஷ்மா, சுபிக்ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது.
நடிகர்கள் ஸ்ரீகாந்த், சரவணன், நடிகைகள் இனியா, ஈடன், ஆர்த்தி, தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் கதிரேசன், தயாரிப்பாளர்கள் கில்டு செயலாளர் ஜாகுவார் தங்கம், பட அதிபர்கள் ‘கலைப்புலி’ ஜி.சேகரன், பி.டி.செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
நதியா
விழாவில், நடிகை நதியா கலந்து கொண்ட...