நிபுணன் படத்தில் நீங்கள் தோன்ற வேண்டுமா ?
பேஷன் பிலிம் ஃபேக்டரியின் தயாரிப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜுன் துப்பறியும் டி.எஸ்.பி அதிகாரியாகவும், பிரசன்னா மற்றும் வரலட்சுமி சரத்குமார் சக அதிகாரிகளாகவும் நடித்து, இயக்குநர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் 'நிபுணன்' படத்தில் நீங்களும் ஒரு காட்சியில் தோன்ற வேண்டுமானால்….? மேற்கொண்டு கவனமாக வாசியுங்கள்.
திரைப்படத்தின் 'க்ளைமேக்ஸ்' காட்சியில் அதிர்ச்சியான 'லைவ் நிகழ்வு' ஒன்று இணையத்தில் குறிப்பாக முகநூல் மற்றும் ட்விட்டரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது.
இந்த காட்சியை உங்கள் கைப்பேசியின் (ஸ்மார்ட்ஃபோன்) வாயிலாகவோ அல்லது நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா மூலமோ சற்று அதிர்ச்சியான முகபாவனையோடு உங்கள் ஊர், நாடுகளில் உள்ள ஒரு பிரபலமான லேன்ட்மார்க்கின் அருகில் உதாரணமாக சான்ஃபிரான்சிஸ்கோ என்றால் கோல்டன் கேட் பாலம...
