நுண்ணுணர்வு திரை விமர்சனம்
சக்தி ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி மதிவாணன் சக்திவேல் இயக்கி கதாநாயகனாகவும் நடிக்க,
இந்திரா , தினேஷ், திரி, ஸ்ரீபக், கீதாவாணன் உள்ளிட்டோர் நடிப்பில் வந்திருக்கும் படம் நுண்ணுணர்வு . இது நல்லுணர்வா ? பார்க்கலாம் .
சென்னையிலிருந்து ஆஸ்திரேலிய சென்று பல் மருத்துவராக பணியாற்றுபவன் சந்துரு (மதிவாணன் சக்திவேல்).
ஆஸ்திரேலியா வாழ் தமிழ்ப் பெண் சாரு (இந்திரா )
கண் காணாது இருப்போரின் செயல்பாடுகளை எந்த கருவியும் இன்றி , அச்சு அசலாய் உணரும் டெலிபதி என்ற ஞானம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறாள் இந்திரா
ஒரு நிலையில் அவளுக்கு டெலிபதி கை கூடுகிறது . இயல்பாகவோ அல்லது நிகழ்தகவாகவோ அவளுக்கு சந்துருவோடு டெலிபதித் தொடர்பு ஏற்படுகிறது .
அவனும் இவளை உணர்கிறான் .
ஆரம்பத்தில் இருவரும் ஹேண்ட்ஸ் ஃபிரீ செல்போனில் பேசிக் கொள்வது போல, டெலிபதி மூலம் பேசிக் கொள்கின்ற...
