
நெஞ்சம் மறப்பதில்லை – திரை விமர்சனம் (Rank 4/5)
செல்வராகவன் தன் ஸ்டைலில் ஒரு ஹாரர் படத்தை கொடுத்திருக்கிறார். அப்பாவியை கெட்டவன் கொலை செய்ய அவர் ஆவியாக வந்து பழி வாங்கும் பழைய ஃபார்முலாவை தான் செல்வராகவன் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அதை அவர் பயன்படுத்திய விதம் தான் அருமை.
ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்த கடவுள் பக்தி அதிகம் உள்ள மரியம்(ரெஜினா கசான்ட்ரா) பணக்கார தம்பதியான ராம்சே(எஸ்ஜே சூர்யா), ஸ்வேதாவின்(நந்திதா ஸ்வேதா) குழந்தையை பார்த்துக் கொள்ளும் வேலையில் சேர்கிறார்.
குறுக்கு வழியில் முன்னுக்கு வந்த ராம்சேவுக்கு மரியாவை பார்த்ததுமே காம உணர்வு தான் ஏற்படுகிறது. அவர் மரியாவிடம் சில்மிஷம் செய்ய முயற்சி செய்ய அவர் விலகிச் செல்கிறார். ராம்சேவால் கொலை செய்யப்படுகிறார் மரியம். ஆனால் அவர் ராம்சேவை பழி வாங்க ஆவியாக வருகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
எஸ்.ஜே. சூர்யா தன் நடிப்பால் மிரட்டுகிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பக்கபலமா...