
பாரதிராஜா – விதார்த் நடிக்கும் “குரங்கு பொம்மை”
ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் "இயக்குநர் இமயம்" பாரதிராஜா - விதார்த் இணைந்து நடிக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தை நாளைய இயக்குனரில் வெற்றி பெற்ற நித்திலன் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக டெல்னா டேவிஸ் நடித்திருக்கிறார். மேலும் பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, ரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் குறித்து இயக்குனர் நித்திலன் கூறும்போது,
மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும். அதன் குறியீடாக வைத்து ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியிருக்கிறேன். இதில் விதார்த்துக்கு அப்பாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். வித்தார்த்துக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் என்ற கேரளா பெண் நடித்திருக்கிறார்.
இப்படம் அப்பா, மகனுக்கும் இடையேயான ஒரு பாசத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம். ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இரு...