
பிரபல தயாரிப்பாளருக்கு தண்ணி காட்டும் விக்ரம்
விக்ரம் என்றால் எல்லோரும் நல்ல பழக குடியவர் சிரித்து பேச கூடியவர் என்று சினிமா வட்டாரத்தில் உண்டு அதே விக்ரமுக்கு இன்னொரு முகம்மும் உண்டு ஒருவரை கழட்டிவிட ஆரம்பித்தால் அவர்களை மிகவும் மோசமாக நடத்துவார் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசிக்கபடுகிறது இப்ப நாம் பார்க்க போகிறது விக்ரமின் இரண்டாவது முகம்
இருமுகனின் இவ்ளோ பெரிய வெற்றியை விக்ரமே எதிர்பார்த்திருக்க மாட்டார். கிட்டதட்ட 92 கோடி வசூல் என்கிறது பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம். இதற்கப்புறம் எந்தப்படம் என்பதிலும், அதை இயக்கப் போவது யார் என்பதிலும் கடும் குழப்பத்திலிருக்கிறார் விக்ரம். இறுதியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
சமீபத்தில் வெளிவந்து பெரும் ஹிட்டடித்த ‘டோன்ட் ப்ரீத்’ என்ற ஆங்கிலப் படத்தை அப்படியே தமிழில் எடுக்கலாம் என்பதுதான் அவரது எண்ணம். இருமுகன் இயக்குனரையே இந்த படத்தையும் இயக்கச் சொல்லி விட்டாராம்.
நல்ல விஷயம். அதற்கு முன்...