Thursday, April 30
Shadow

Tag: #புகழேந்திஎன்னும்நான்

படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்

படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்

Latest News, Top Highlights
`புகழேந்தி என்னும் நான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக இயக்குனர் மகேந்திரன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது திடீரென இயக்குனர் மகேந்திரன் மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் மகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறுகையில், இயக்குனர் மகேந்திரன் மூச்சுத்திணறல் மற்றும் அதிகமான ரத்த அழுத்த சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது...