
‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த படைப்பு ‘சாம்பிநாதன்’
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ஆசை நிச்சயமாக இருக்கக் கூடும். சிலருக்கு அது தங்களின் வாழ்நாளில் நிறைவேறும்... ஆனால் சில மனிதர்களோ அந்த ஆசை நிறைவேறாமல் இறந்து விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு ஆத்மா, தன்னுடைய ஆசையை நிறைவேற்றி கொள்ள ஒரு இளைஞனின் உதவியை நாடுகிறது....அது எப்படிப்பட்ட ஆசை என்பதை விவரிக்கிறது, 'பெஞ்ச் பிலிக்ஸ்' வழங்கி இருக்கும் 'சாம்பிநாதன்' என்னும் 29 நிமிட குறும்படம். தரமான குறும்படங்களை தேர்ந்தெடுத்து, அதை மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்க்கும் 'பெஞ்ச் பிலிக்ஸ்' நிறுவனத்தின் அடுத்த அற்புதமான படைப்பு இந்த 'சாம்பிநாதன்' என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம்.
பொதுவாகவே 'சாம்பி' எனப்படும் பேய்களை நாம் இதுவரை திரைப்படங்களில் ரத்தம் குடிக்கும் பேயாகவும், மனிதர்களை கடித்து சாப்பிடும் பேயாகவும், பார்ப்பவர்களை பயமுறுத்தும் பேயாகவும் தான் பார்த்து இருக்கிறோம்.... ...