விசுவாசம் படத்திற்கு யார் தான் இசையமைபாளர்?
‘வீரம், வேதாளம்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிவா – அஜித் கூட்டணி அமைத்து, கடந்த ஆண்டு ரிலீஸான படம் ‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் புதிய படத்தையும் சிவாவே இயக்கவுள்ளார். இது ‘தல’ அஜித்தின் 58-வது படமாம். ‘விசுவாசம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. வெற்றி ஒளிப்பதிவு செய்யவுள்ள இதற்கு ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார்.
‘மங்காத்தா’ படத்திலிருந்தே சால்ட் & பெப்பர் லுக்கில் வலம் வந்த அஜித், இதில் மிக ஸ்டைலிஷாகாவும், செம ஸ்லிம்மாகவும் தோன்றவுள்ளாராம். சமீபத்தில், படத்திற்கு பூஜை போடப்பட்டது. முதற்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். ஷூட்டிங்கை இம்மாதம் (ஜனவரி) இறுதியில் துவங்கவுள்ளனர். படத்தை தீபாவளி ஸ்பெஷலாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனராம்.
முதலில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா கமிட்டாகியிருந்ததாக கூறப்பட்டது. அ...
