மீண்டும் ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் கமல்ஹாசன்
கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்'. இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு விஸ்வரூபம்-2 ரிலீசாக இருக்கிறது.
கிராபிக்ஸ் பணிகள் சமீபத்தில் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து இருக்கிறது. இந்நிலையில், விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட இருப்பதாக போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது.
ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், கமலின் விஸ்வரூபம்-2 டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தை, ஏப்ரலில் ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப...
