
ஆதிவாசி குழந்தைகள் கல்விக்காக ஸ்கூல் கட்டி கொடுத்த தமிழ் நடிகை
நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையில் ஈடுபட்டு வரும் நடிகை காஜல் அகர்வால், ஆந்திராவில் ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க இலவசமாக ஸ்கூல் கட்டி கொடுத்துள்ளார்.
காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இவர் தமிழில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். அதையடுத்து தற்போது கமல் ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது சமூக சேவை குறித்து அவர் தெரிவிக்கையில், நான் சமூக சேவைகளிலும் ஈடுபடுவதுடன், அதற்கு என் பணத்தை செலவிடுகிறேன் என்றார். மேலும் ஆந்திராவில் உள்ள அரக்கு என்ற பகுதிக்கு சென்றபோது அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் இல்லாமல் அவதிப்படுவதைப் பார்த்து, நன்கொடை வசூலித்து அரக்கு பகுதியில் பள்ளிக்கூடம் கட்டி கொடுத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்....