ஹீரோ திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)
சக்திக்கு (சிவகார்த்திகேயன்) பள்ளியில் படிக்கும்போதே சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்பதே கனவு. நன்றாக படிக்கும் சக்தி ஒரு கட்டத்தில் தன் சான்றிதழை விற்க வேண்டி வருகிறது. அதன் பிறகு அவர் போலிச் சான்றுகள் தயாரித்து விற்பனை செய்கிறார். அவர் தன் தங்கையாக பார்க்கும் மதி (இவானா) ஊழல் கல்வி முறையால் உயிர் இழக்கிறார்.
இதையடுத்து ஃபிராடாக இருந்த சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்து வில்லனான மகாதேவை (அபய் தியோல்) எதிர்கொள்கிறார். இதற்கிடையே சத்யமூர்த்தி(அர்ஜுன்) பணக்காரர்களிடம் இருந்து திருடி கல்வி நிறுவனம் ஒன்றை துவங்கி இலவசமாக கல்வி அளிக்கிறார். அது படிப்ப வச்சு வியாபாரம் பண்றவன் இல்ல படிக்கிறவனை வச்சு வியாபாரம் பண்றவன் என்று கூறும் மகாதேவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
சக்தி சத்யமூர்த்தியை எப்படி சந்திக்கிறார், சக்தி வாய்ந்த வில்லனான மகாதேவை எப்படி அடக்குகிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லியுள்ள...

