இரண்டு கதாநாயகர்கள் வில்லன்களான படம் ‘முன்னோடி ‘
ஒருவன் யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும்.
'வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்' என்கிற இக்கருத்தை முன்வைத்து உருவாகியுள்ள படம் தான் 'முன்னோடி'.
இதை கதை, திரைக்கதை, வசனம் எழுதி புதுமுக இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் இயக்கியுள்ளார். தொழிலதிபரான இவர் தென்காசிக்காரர்..சினிமா மீது கொண்ட காதலால் யாரிடமும் பணிபுரியாமல் இயக்குநர் ஆகியிருக்கிறார்.
இப்படத்தை எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். தெலுங்கில் வளர்ந்து வரும் ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
இரண்டு கதாநாயக நடிகர்கள் இப்படத்தின் மூலம் வில்லன்களாகியுள்ளனர். 'கங்காரு' படத்தின் நாயகன் அர்ஜுனா, 'குற்றம் கடிதல்' படத்தில் குணச்சித்திர நடிப்பால் நம் மனம் கவர்...
