உச்சத்தை அடைந்த பிரபாஸ் – பாகுபலி மேடம் டுசாட்ஸ் – பாகுபலி மெழுகு சிலை
எப்போதுமே ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் அதற்கு உருமாறுவது, அதிகமான தேதிகள் ஒதுக்குவது என்பதற்கு முன்னணி நாயகர்கள் பலரும் ஒப்புக் கொள்வதில்லை. இதன் விதிகளை உடைத்து 'பாகுபலி' படத்துக்காக 2 ஆண்டுகள் ஒதுக்கினார் பிரபாஸ்.
S.S.ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' படத்தின் வசூல் உலக திரையுலகினரை ஆச்சர்யப்பட வைத்தது. அமிதாப் பச்சனில் தொடங்கி அனைவருமே இப்படத்தைப் பாராட்டி புகழ்ந்தார்கள். இந்தியளவில் சிறந்த படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. உலகளவில் சீனா உட்பட பல்வேறு நாடுகளில் வெளியாகி அங்கும் தனது முத்திரை பதித்தார் பிரபாஸ்.
பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தும் விதமாக உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இவர் நடித்த பாகுபலி கதாபாத்திர சிலை நிறுவப்படவுள்ளது.
2017ம் ஆண்டு பேங்காக்கில் நடக்கவுள்ள மேடம் டுசாட்ஸ் நிகழ்வுக்காக பிரபாஸ்ஸின் மெழுகு சிலை வடிவமைக்கப்படுவத...
