ஹவுஸ் ஓனர் திரை விமர்சனம் ரேட்டிங்: 3.5/5
ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே மற்றும் அம்மணி போன்ற படங்களை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள அடுத்த படம் 'ஹவுஸ் ஓனர்'. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்ட காலகட்டத்தில் கதை தொடங்குகிறது. வாசு (கிஷோர்), ராதா (ஸ்ரீரஞ்சனி) ஆகிய இருவர் மட்டுமே தனி வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில், அவர்கள் மழை, வெள்ளத்தில் படும் கஷ்டங்களை கவிதை நயத்துடன் இயக்குனர் கூறியிருப்பதுதான் இந்த படத்தின் கதை
ஞாபகமறதி நோயால் பாதிப்பு அடைந்துள்ள கணவர் கிஷோரை வெளியே போகாமல் இருப்பதையும் பார்த்து கொள்ள வேண்டும், உள்ளே அவர் செய்யும் சின்ன சின்ன பிடிவாத குணம் சேட்டைகளையும் பொறுத்து கொள்ள வேண்டும் என்ற கனமான பாத்திரம் ஸ்ரீரஞ்சனி. இதுவரை சின்னச்சின்ன கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த இவருக்கு அளித்த முக்கியத்துவமான வேடத்த...
