சான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் : புதிய இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன்
அண்மையில் வெளியான ஒருபட்ஜெட் படம்தான் 'வென்று வருவான்' ,ஆனால் படத்தைப் பார்த்த ஊடகங்கள் அதில் பாராட்டத்தக்க ஒன்றாக படத்தின் இசையைப் குறிப்பிட்டிருந்தன. அப்படி அதற்கு இசையமைத்திருந்தவர்தான் அறிமுக இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன்.
கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை, கைநிறைய சம்பளம் என்றிருந்தவரை சினிமா அழைத்துக் கொண்டு விட்டது. இசையமைப்பாளர் ஆகி விட்டார்.இனி முரளிகிருஷ்ணனுடன்...!
உங்கள் முன் கதை?
எனக்கு சொந்த ஊர் சென்னைதான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே இங்கேதான். எனக்குள் சினிமா பாடல்கள் இசைபற்றிய ஆர்வம் சின்ன வயதிலிருந்தே தொடர்ந்து கொண்டு இருந்தது. கல்லூரி செல்லும்போது ஆடியோ கேசட் ரெக்கார்டு கடையில் பாடல்கள் கேட்டு கேட்டு பழக்கமாகி ரசனை வளர்ந்தது.பி.எஸ்ஸி மேத்ஸ் முடித்தேன்., இரண்டு எம்.பி.ஏ. முடித்தேன்.
இசையை எங்கே கற்றுக் கொண்டீர்கள்?
எனக்கு சின்ன வயதிலிருந்தே இசையைக் கற்று...
