ஜெர்சி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்ற ஹரீஷ் கல்யாண்
வாழ்க்கையின் பெரும்பாலான ஆச்சர்யங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தான் வரும். குறிப்பாக, சினிமாவில், சிவப்பு கம்பளங்கள் தன்னிச்சையாக விரிக்கப்படும். அப்படி தான் தெலுங்கு சினிமாவில் ஹரீஷ் கல்யாணுக்கும் ஒருவித வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை கவர்ந்த ஹரீஷ் கல்யாண், தெலுங்கு சினிமாவிலும் நானி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஜெர்சி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பெரும் அளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறார். சமூக வலைத்தளங்களிலும், விமர்சனங்களிலும் அவர் நடித்த சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
"இது முற்றிலும் நானே எதிர்பாராதது, என் கதாபாத்திரத்தை கவனித்து, இந்த அளவிற்கு என்னை பாராட்டுவார்கள் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. தெலுங்கு ரசிகர்களின் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த...
