Monday, August 10
Shadow

Tag: நகர்கிறது

நட்சத்திரம் நகர்கிறது திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Shooting Spot News & Gallerys
சினிமாவில் நடித்து பெரிய ஹீரோ ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி வருகிறார் அர்ஜுன் (கலையரசன்). அங்கு நாடகக் குழு ஒன்றில் இணைந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபடும் அவர், குழுவிலிருப்பவர்களின் கருத்தியலில் முரண்படுகிறார். தொடர்ந்து நாடகக் குழு சார்பில் அரசியல் நாடகம் ஒன்று நடத்த திட்டமிடப்படுகிறது. இதையொட்டி ரெனே (துஷாரா) - இனியன் (காளிதாஸ்) காதல் ப்ரேக் ஒன்றும் நிகழ்கிறது. இப்படியான பல கிளைக்கதைகளால் நகரும் நட்சத்திரக் கூட்டத்தில் இறுதியில் அரசியல் நாடகம் நடத்தப்பட்டதா, அர்ஜுன் என்ன ஆனார், துஷாரா - காளிதாஸ் காதல் என்னவானது என்பதை சொல்லும் படம்தான் 'நட்சத்திரம் நகர்கிறது'. தமிழ் என்கின்ற ரெனேவாக துஷாரா விஜயன். தமிழ் சினிமாவின் அழுத்தமான பெண் கதாபாத்திர வார்ப்பு. திமிரான உடல்மொழி, யாருக்கும் அஞ்சாத நெறி, தனக்கு தோன்றுவதை பேசி, பிடித்ததை செய்து, தனக்கு என்ன வேண்...