சினிமாவில் நடித்து பெரிய ஹீரோ ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி வருகிறார் அர்ஜுன் (கலையரசன்). அங்கு நாடகக் குழு ஒன்றில் இணைந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபடும் அவர், குழுவிலிருப்பவர்களின் கருத்தியலில் முரண்படுகிறார். தொடர்ந்து நாடகக் குழு சார்பில் அரசியல் நாடகம் ஒன்று நடத்த திட்டமிடப்படுகிறது. இதையொட்டி ரெனே (துஷாரா) – இனியன் (காளிதாஸ்) காதல் ப்ரேக் ஒன்றும் நிகழ்கிறது. இப்படியான பல கிளைக்கதைகளால் நகரும் நட்சத்திரக் கூட்டத்தில் இறுதியில் அரசியல் நாடகம் நடத்தப்பட்டதா, அர்ஜுன் என்ன ஆனார், துஷாரா – காளிதாஸ் காதல் என்னவானது என்பதை சொல்லும் படம்தான் ‘நட்சத்திரம் நகர்கிறது’.
தமிழ் என்கின்ற ரெனேவாக துஷாரா விஜயன். தமிழ் சினிமாவின் அழுத்தமான பெண் கதாபாத்திர வார்ப்பு. திமிரான உடல்மொழி, யாருக்கும் அஞ்சாத நெறி, தனக்கு தோன்றுவதை பேசி, பிடித்ததை செய்து, தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் நாயகி. இனியனாக காளிதாஸ் ஜெயராமன் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை கச்சிமாக நடித்து கொடுத்திருக்கிறார். ஆனால், அவரது கதாபாத்திரத்தை இன்னும் கூட ஆழமாக எழுதியிருக்கலாம். பிற்போக்குத்தனங்களாலான பாத்திரத்தில் கலையரசனின் நடிப்பு ஈர்க்கிறது. அவமானப்படுவது, குடித்துவிட்டு சண்டையிடுவது என கவனிக்க வைக்கிறார். நாடகக் குழுவில் உள்ள கதாபாத்திரங்களின் தேர்ந்த நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

படத்தின் பிளஸ்:
காதலும், அதற்கான விஷுவல்ஸும், கூடவே வரும் இளையராஜாவின் பாடலும் என பல காட்சிகள்
பிரசாரமில்லாத திரைக்கதை, கிஷோர்குமாரின் ஒளிப்பதிவு,
மொத்தத்தில் நட்சத்திரம் நகர்ந்துகொண்டே மின்னுவதை பார்க்கலாம்.