நடிகை அதிதி சொல்லும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது இயக்குனர் செல்வகண்ணன்
செல்வகண்ணன் ஆகிய நான் திரைத்துறையில் எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். இயக்குநர்கள் "சாமி" "ஏ.ஆர்.காந்திகிருஷ்ணா" "ராஜேஷ் செல்வா" ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன். தற்போது "நெடுநல்வாடை" என்ற தமிழ்த் திரைப்படத்தை இயக்கி வருகிறேன். என் மேலும், என் கதையின் மேலும் இருக்கும் நம்பிக்கையினால், இந்தப் படத்தை என்னுடைய கல்லூரிக்கால நண்பர்கள் ஐம்பது பேர்கள் ஒன்று சேர்ந்து ஆளுக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்ற முறையில் உதவி செய்து இந்தத் திரைப்படம் உருவாகிறது.
இந்தப் படத்தில் கதாநாயகியாக "அதிதி (சயானா / ஆதிரா சந்தோஷ்)" என்பவரை புதுமுக நாயகியாக அறிமுகப்படுத்தினேன். ஜனவரியில் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்தபின் இருந்த இடைவெளியில் "பட்டதாரி " என்ற படத்தில் நாயகியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. என் படம் முடியாமல் அதிதி வேறு படம் நடிக்கக் கூடாது என்று ஒப்பந்தம் இருந்த போதும், மன...
