நம்ம வீட்டு பிள்ளை திரை விமரசனம் (ரேட்டிங் 3.5/5)
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. உறவுகளை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனும், ஐஸ்வர்யா ராஜேஷும் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர். இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.
அருள்மொழி வர்மனின் (பாரதிராஜா) பேரன் தான் அரும்பொன் (சிவகார்த்திகேயன்). சின்ன வயதிலேயே அப்பாவை இழந்து விடுகிறார் அரும்பொன். அருள்மொழி வர்மனின் மற்ற மகன்கள் அரும்பொன்னின் குடும்பத்தை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து (ஐஸ்வர்யா ராஜேஷ்) துளசியின் திருமணத்தில் ஏற்படும் பிரச்னை, அரும்பொன்னை பெரும் சிக்கலில் தள்ளுகிறது. அதிலிருந்து மீண்டு, தன் தங்கையின் வாழ்வை அரும்பொன் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் மீதிக் கதை.
இதற்கு முன்பு பாண்டிராஜ் இயக்கியிருந்த ’கடைக்குட்டி சிங்கம்’ திரைப்பட...
