ராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ், ஆஷிமா நர்வால் நடிக்கும் ராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய பிரபலமான திங்க் மியூசிக் இந்த கைப்பற்றியுள்ளது.
எந்த ஒரு படத்துக்கும் இசை என்பது தான் ஆன்மா, அதை காட்சிகளின் மூலம் மேலும் அழகாக மாற்ற முடியும் என்பதே உண்மை. இந்நிலையில், இதே போன்று ராஜபீமா படத்தின் இசை உருவாகி இருக்கும் விதத்தால் தயாரிப்பாளர் எஸ்.மோகன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். திங்க் மியூசிக் இந்த படத்தின் இசை உரிமைகளை கைப்பற்றியிருப்பதால் ஒட்டுமொத்த 'ராஜபீமா' குழுவும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.
இது குறித்து பேசிய தயாரிப்பாளர் எஸ்.மோகன், "ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், சாதாரண ஒரு இசை ரசிகனாக இசைக்கு பொருத்தமான காட்சிகளை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு அனுபவம். இசையமைப்பாளர் சைமன் கே கிங் மிகச்சிறந்த ஒரு திறமைசாலி. உலகளாவிய இசை ரசிகர்களின் கவனத்தை உடனடியாக ஈர...
