Sunday, January 11
Shadow

Tag: ரிலீஸ்

சரத்குமார் – சசிகுமார் இணையும் ’நா நா’ – ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Latest News, Top Highlights
"சசிகுமார், சரத்குமார் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. சலீம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நிர்மல்குமார், அரவிந்த்சாமியை ஹீரோவாக வைத்து சதுரங்க வேட்டை 2 படத்தை இயக்கினார். இந்தப் படம் ஃபைனான்ஸ் பிரச்னையில் சிக்கி இருப்பதால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இந்த இரண்டு படங்களை அடுத்து சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் நிர்மல் குமார். கல்பத்ரு பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு ‘நா நா’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. சசிகுமார்...
கொரில்லா படத்தின் ரிலீஸ் மீண்டும்  தள்ளிவைப்பு

கொரில்லா படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு

Latest News, Top Highlights
ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கியிருக்கும் படம் ‘கொரில்லா ’. இந்தப் படத்தில் ஜீவா ஹீரோவாக நடிச்சிருக்காரு அவருக்கு ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடித்த ஷாலினி பாண்டே நடிச்சிருக்காங்க. ஜீவாவின் 29-வது படமாக உருவாகிருக்கும் இந்த படத்தில் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ராதாரவி என பலர் நடிக்க கொரில்லா குரங்கு ஒன்று முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த கொரில்லா படம் வரும் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் இப்ப இந்த படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் தள்ளிவைக்க இருக்கிறதா படக்குழு அறிவித்துள்ளனர்....
வைபவ் நடிக்கும் ‘ஆர் கே நகர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

வைபவ் நடிக்கும் ‘ஆர் கே நகர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
வைபவ், சரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு அரண்மனை 2 ,ஈசன், மேயாத மான் போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்டை படத்தில் ஒரு காட்சிக்கு மட்டும் வந்து செல்வார். தற்போது இவரது நடிப்பில் ஆர்கேநகர் படம் வெளியாக உள்ளது. சரவண ராஜன் இயக்கத்தில் ஏப்ரல் 12ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ஆர்.கே.நகர். இந்த திரைப்படத்தில் வைபவ், சம்பத் ராஜ், பிரேம்ஜி, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், சந்தான பாரதி, சன அல்தாப், ஸ்ரீகுமார் போன்ற பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர், இப்படத்திற்கு வெங்கட்பிரபுவின் தம்பியான பிரேம்ஜி இசையமைத்து உள்ளார். அதனால் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்....
வெளியானது அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி

வெளியானது அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி

Latest News, Top Highlights
தீரன் பட புகழ் வினோத் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கி வருகிறார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படம் பெண்களை மையப்படுத்திய படம். இப்படம் வரும் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என நிறைய செய்திகள் வந்தன. ஆனால் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு அதிரடி சண்டை காட்சி இடம் பெற்றுள்ளதாம். அந்த சண்டை காட்சியில் அஜித் டூப் எதுவும் போடாமல் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்....