குப்பத்து ராஜா திரைவிமர்சனம் (ரேடிங் 2.5/5)
சென்னை குப்பத்தில் வாழும் சில குடிசை வாசிகளின் வாழ்வில் நிகழும் அமைதியின்மையை சில சமூக விரோத சக்திகள் எவ்வாறு உருவாக்குகின்றன என்பதே படத்தின் கதை.
படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் குப்பத்து ராஜா ராக்கெட் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சேட்டு கடையில் வண்டி சீஸ் செய்யும் வேலை செய்கிறார். குப்பத்தில் வாழ்ந்தாலும் குடிகார அப்பா எம்எஸ் பாஸ்கர், நண்பர்கள், காதலி என மகிழ்ச்சியாக இருக்கிறார்.ஆரம்பம் முதலே அந்த பகுதியில் பெரிய கையான பார்த்திபனுடன் ஜீவிக்கு அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இதனால் ஊர் கவுன்சிலர், வேறு சில ரௌடிகளுடனும் அவருக்கு பகை வளர்கிறது.
ஒரு சமயத்தில் எதிரிகள் கங்கணம் கட்டிக்கொண்டு ஜீவி பிரகாஷின் அப்பா எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்துவிடுகிறாரகள். அதற்காக பார்த்திபன் உட்பட பலர் மீதும் சந்தேகப்படுகிறார் ஜீ.வி பிரகாஷ்.
பார்த்திபன், படம் முழுக்க கையில் இரண்டு எம்ஜிஆர் புகைப...
