Saturday, October 10
Shadow

Tag: வில்லனாக

தல 60 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்

Latest News, Top Highlights
நடிகர் அஜீத் நடிக்கும் தல 60 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிக்கக் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத் நடிக்கும் படத்திற்கு ’தல 60’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ’நேர்கொண்ட பார்வை’யை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். அந்தப் படத்தை தயாரித்த, போனி கபூர், ஜீ ஸ்டூடியோஸூடன் இணைந்து தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் நவம்பரில் தொடங்குகிறது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தில் அஜீத்துக்கு வில்லனாக பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தயாரிப் பாளர் போனி கபூர் அவரிடம் பேசிவருவதாகவும் ஆனால் அஜய்தேவ்கன் தரப்பில் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் தெரிகிறது. கமலின் ’இந்தியன் 2’...

தளபதி 64 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்

Latest News, Top Highlights
தளபதி 64 படத்தில் பிரபல மலையாள நடிகர் ஆண்டனி வர்கிஸ் வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 64-வது படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது. மேலும், இந்தப் படத்தை 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தளபதி 63 படத்தின் பணிகளை முடித்துக் கொண்ட பிறகு செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் முதல் தளபதி 64 படப்பிடிப்பு பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவு பணிகளை சத்யன் சூர்யனும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜும் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு தொடங்கியவுடன் படத்தின் டைட்டில் தொடர்பான அறிவிப்பு ...