ஸ்டுடியோ கிரீன் k.E.ஞானவேல் ராஜா வெளியிடும் கவுதம் கார்த்திக் – நிக்கி கல்ராணி நடிக்கும் “ ஹர ஹர மகாதேவகி “
ஸ்டுடியோ கிரீன் k.E.ஞானவேல் ராஜா வெளியிடும் கவுதம் கார்த்திக் – நிக்கி கல்ராணி நடிக்கும் “ ஹர ஹர மகாதேவகி “
ஸ்டுடியோ கிரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடிக்கும் , ஹரி இயக்கத்தில் “ சி 3 “ ( S3) படபிடிப்பு முடிவடைந்து டிசம்பர் 16ஆம் தேதி வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதையடுத்து சூர்யா நடிக்கும் , விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “ தானா சேர்ந்த கூட்டம் “ படபிடிப்பு இம்மாதம் ஆரம்பமாகிறது. மேலும் இவர் வெளியிடும் உரிமை பெற்ற படமாக புதிய படத்தின் பூஜை இன்று ( 06.11.16) நடந்தது. இப்படத்திற்கு “ ஹர ஹர மகாதேவகி “ என்று பெயரிட்டுள்ளனர்.
இதில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்க , அவரது ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மேலும் சதீஷ் , மொட்டை ராஜேந்திரன் , ரவி மரியா , நமோ நாராயணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தை , கதை , திரைக்கதை , அமைத்து வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாக...
