கார்பரேட் மாடலிங்குடன் மோதும் தமிழச்சி மீரா மிதுன்
மீராமிதுன் இவர் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர். சென்னையை சேர்ந்த இவர் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். படிப்பிற்கு பின் மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உட்பட நான்கு அழகி பட்டங்களை வென்றவர். தற்போது மிஸ் தமிழ்நாடு திவா எனும் பெயரில் தமிழ்ப்பெண்களுக்கென பிரத்யேகமாக அழகி போட்டி நடத்த முற்பட்டுள்ளார். இந்த நிலையில் இப்போட்டியை நடத்தக்கூடாது என தனக்கு கொலைமிரட்டல்கள் வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். பத்திரிக்கைகளிலும் அந்த செய்தி வெளியாகியிருந்தது. அதன் தற்போதைய நிலவரம் கேட்டு அவரைத் தொடர்பு கொண்டபோது ...
நான் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்தேன் இந்தத்துறை கார்பரேட்கள் கொடிகட்டி பறக்கும் துறை இதில பெண்கள் வளர்வது மிகவும் கடினம். தமிழ்ப்பெண்ணான நான்...
