12 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் அறிமுகமாகிறேன் -பிரபு தேவா பேட்டி
தமிழ் சினிமாவின் மைகேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபு தேவா. 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், எங்கள் அண்ணா படத்தில் நடித்தார். அதற்கு பின், 12 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் தேவி படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். நான்இ பல அவதாரங்களில்னி அறிமுகமாகியுள்ளேன் இப்ப மீண்டும் ஒரு அறிமுகம் தான் என்று நினைக்குறேன் சரி வாங்க , அவருடன் பேசுவோம்...
27 ஆண்டு சினிமா பயணம் எப்படி இருக்கு?
நான் சினிமாவுக்கு வரும்போது, 12 வயது. இப்போது நினைத்து பார்த்தாலும், ஆச்சரியமாகவும், மலைப்பாகவும் இருக்கிறது. சினிமாவுக்கு வந்த புதிதில், எது தவறு, எது சரி என தெரியாது. இப்போது, ஓரளவு தெரிந்து கொண்டேன்.
தேவி படத்துக்குள் நீங்கள் வந்தது எப்படி?
என்னை எப்போதும், பெரிய ஆளாக நினைத்தது இல்லை. ரொம்ப சாதாரண ஆளாகவே என்னை இப்போதும் நினைக்கிறேன். நல்ல கதைக்காக தமிழில் மீண்டும் நடிக்க காத்திருந்தேன். அப்போது தான்...