உலகிலேயே மிகப்பெரிய பரதநாட்டியம் நேற்று சென்னையில் நடைப்பெற்றது. – பரதம் 5000.
ஏப்ரல் 14ம் தேதி வெள்ளிக்கிழமை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக வளாகத்தில் பரதம் 5000 என்ற தலைப்பில் 5000 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஆடி உலக சாதனை படைத்துள்ளனர்.
பத்மபூஷன் பத்மா சுப்பரமணியம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு வேல்ஸ் பல்கலைகழக வேந்தர் திரு. ஐசரி கணேஷ் தலைமை வகித்தார். VGP குழுமத்தின் தலைவர் திரு. V.G. சந்தோஷம், சுற்றுலா ஆர்வலர் மதுரா டிராவல்ஸ் திரு. V.K.T. பாலன், சேவைரட் குழம நிர்வாக இயக்குனர் திரு. வினோத் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்.
இந்த பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி மும்பை, டில்லி, பெங்களூரு மற்றும் மலேசியா போன்ற பல இடங்களில் இருந்து கிட்டதட்ட 5000 மாணவர்கள் திருக்குறள் பாடலுக்கு தொடர்ந்து 26 நிமிடம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்தனர்.
கின்னஸ் BOOK OF RECORDS சார்பாக பிரதிநிதிகள் நேரில் வந்து GUINNESS சான்றித...
