Friday, June 12
Shadow

Tag: #aalapaul #police #sexual

பாலியல் விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி சொன்ன அமலாபால்

பாலியல் விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி சொன்ன அமலாபால்

Latest News, Top Highlights
ஜனவரி 31ஆம் தேதி சென்னையின் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் நான் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர் என்னை அணுகி, நடன நிகழ்ச்சியை பற்றி ஒரு சில முக்கிய விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று கூறினார். மலேசியாவில் பிப்ரவரி 3ஆம் தேதி நடக்கும் விழாவுக்கு பிறகு அவருடன் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தார். அப்படி என்ன விஷேசமான டின்னர் என நான் அவரை குறுக்கு கேள்வி கேட்டபோது, அவர் அலட்சியமாக உனக்கு தெரியாதா? என்ற பாணியில் பேசினார். நாங்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் எங்களை சுற்றி யாரும் இல்லாததால் நான் கலவரமானேன். அந்த மனிதர் ஸ்டுடியோவுக்கு வெளியில் போய், என்னுடைய நல்ல முடிவுக்காக காத்திருப்பதாக சொன்னார். நான் என் நலம் விரும்பிகள், வேலையாட்களை என்னை மீட்க அழைத்தேன். அவர்கள் அங்கு வந்து சேர்வதற்கு அரை மணி நேரம் ஆனது. அந்த மனிதரோ அவரின் வழக்கமான தொழில் பேரத்தை பேசுவதை போல, சாதாரணமாக ஸ்டுடி...